< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கீரிப்பாறை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
|14 Jun 2022 1:46 AM IST
கீரிப்பாறை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
அழகியபாண்டியபுரம்,
கீரிப்பாறை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
கீரிப்பாறை அருகே உள்ள பால்குளம் பகுதியை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 73), கூலி தொழிலாளி. இவருடைய மகன் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மாலையில் வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் இதுபற்றி தகவல் அறிந்ததும் கீரிப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து கீரிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.