< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
|8 Jan 2023 12:15 AM IST
தூத்துக்குடியில் போக்சோ சட்டத்தில் முதியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சவரிமுத்து (வயது 78). இவர் 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் சவரிமுத்துவை கைது செய்தாா்.