< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
பதினெட்டாம்படி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம்
|28 May 2023 12:15 AM IST
தினையத்தூர் கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானை தாலுகா தினையத்தூர் கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி திருவாடானை வைரமணி குருக்கள் தலைமையில் யாக வேள்விகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து கருப்பர் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கருவறையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றது. பின்னர் பதினெட்டாம்படி கருப்பர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.