< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
விபத்தில் சிக்கிய போலீஸ் ஏட்டு சாவு
|17 Oct 2023 1:54 AM IST
விபத்தில் சிக்கிய போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர் புறவழிச்சாலையில் கடந்த 12-ந் தேதி ஏற்பட்ட வாகன விபத்தில் காயம் அடைந்த சூலக்கரை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் (வயது 58) சம்பவத்தன்று விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆமத்தூர் போலீஸ் ஏட்டு கார்த்திகேயன் (40) தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.