ராமநாதபுரம்
உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி
|உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் அருகே உள்ள கூட்டாம்புளியில் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு நிர்வாகத்தின் சார்பில் நேற்று டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி செஞ்சுருள் சங்கத்தின் சார்பாக மாணவர்கள் மற்றும் மாணவிகள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் தாளாளர் செல்லதுரை அப்துல்லா மற்றும் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழியை கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் எடுத்துக்கொண்டனர். கல்லூரி முதல்வர், முனைவர் மாலதி தலைமையில் மாணவி ஷாலினி முதலாம் ஆண்டு வணிகவியல் மற்றும் கணினி துறை உறுதி மொழியை வாசித்தார். நிகழ்ச்சியில் கல்லூரியின் வளாகத்தில் மாணவிகள் எய்ட்ஸ் தினத்தை குறிக்கும் வகையில் அடை யாள போட்டோவை எடுத்துக்கொண்டனர். ஏற்பாடுகளை செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் பேராசிரியர் ஜெயமுருகன், ராஜமகேந்திரன் மற்றும் வள்ளிநாயகம் செய்திருந்தனர்.