< Back
மாநில செய்திகள்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணி உயிரிழப்பு - போலீசார் விசாரணை
சென்னை
மாநில செய்திகள்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணி உயிரிழப்பு - போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
22 May 2022 11:55 AM IST

எழும்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணி உயிரிழந்தார். இதுக்குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

புவனேஸ்வரில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக ராமேசுவரத்துக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை எழும்பூர் ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. அப்போது தனது நண்பர்களுடன் அந்த ரெயிலில் பயணம் செய்து வந்த நபர் ஒருவரை, ரெயில் நிலையத்தில் இறங்க எழுப்பியபோது அசைவற்ற நிலையில் கிடந்தார்.இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆம்புலன்சில் இருந்த மருத்துவ ஊழியர்கள் அசைவற்று கிடந்த நபரை பரிசோதனை செய்தனர்.

அதில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் ஒடிசா மாநிலம், தொலடி பகுதியை சேர்ந்த சுதசனாநாயக் (வயது 44) என்பது தெரியவந்தது. இவர் ரெயிலில் வரும் போது உடல்நல குறைவால் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்