< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
எழும்பூர் அருங்காட்சியகத்தை பார்வையிடும் நேரம் மாற்றம்
|28 Aug 2024 8:04 PM IST
எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னை,
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தை பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது,
எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. எழும்பூர் அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தினமும் காலை 10.30 மணி முதல் 6.30 மணி வரை பார்வையிடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.