< Back
மாநில செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில்  முட்டை விலை 20 காசுகள் சரிவு  525 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் சரிவு 525 காசுகளாக நிர்ணயம்

தினத்தந்தி
|
9 Dec 2022 6:47 PM GMT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 545 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 525 காசுகளாக குறைந்துள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

சென்னை-575, ஐதராபாத்-511, விஜயவாடா-544, மைசூரு-555, மும்பை-591, பெங்களூரு-555, கொல்கத்தா-580, டெல்லி-560.

கறிக்கோழி கிலோ ரூ.104-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.106 ஆக அதிகரித்துள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு செல்வதால் அசைவ உணவுகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை விற்பனை சரிவடைந்துள்ளது. இதுவே முட்டை விலை குறைப்புக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்