< Back
மாநில செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில்  முட்டை விலை 15 காசுகள் உயர்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்வு

தினத்தந்தி
|
25 May 2022 4:29 PM GMT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்வு

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 445 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 15 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை விலை 460 காசுகளாக அதிகரித்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

சென்னை-480, ஐதராபாத்-430, விஜயவாடா-440, மைசூரு-465, மும்பை-485, பெங்களூரு-465, கொல்கத்தா-510, டெல்லி-425.

கறிக்கோழி கிலோ ரூ.122-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.95-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்