< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 'கிடுகிடு' உயர்வு 550 காசுகளாக நிர்ணயம்
|27 Jun 2022 2:45 AM IST
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ‘கிடுகிடு’ உயர்வு 550 காசுகளாக நிர்ணயம்.
நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 23-ந் தேதி முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி முட்டை விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனால் முட்டை கொள்முதல் விலை 535 காசு என்ற புதிய உச்சத்தை தொட்டது.
இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை மேலும் 15 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக உயர்ந்து உள்ளது. முட்டை விலை 'கிடுகிடு' என உயர்ந்து வருவதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பிற மண்டலங்களில் முட்டை விலை அதிகரித்து வருவதால், அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.