< Back
மாநில செய்திகள்
டிரோன் மூலம் தபால் சேவை கொண்டுவர முயற்சி -தமிழக முதன்மை அதிகாரி தகவல்
மாநில செய்திகள்

டிரோன் மூலம் தபால் சேவை கொண்டுவர முயற்சி -தமிழக முதன்மை அதிகாரி தகவல்

தினத்தந்தி
|
12 Oct 2023 5:52 AM IST

டிரோன் மூலம் தபால் சேவை கொண்டுவர முயற்சி எடுக்கப்படுவதாக தமிழக முதன்மை அதிகாரி கூறினார்.

கடலூர்,

இந்திய தபால் துறை தமிழ்நாடு வட்டம் திருச்சி மண்டலம் சார்பில் கடலூர் தபால் கோட்டத்தில் சிறப்பு தபால்தலை கண்காட்சி டவுன்ஹாலில் நடந்தது. கண்காட்சியை தமிழ்நாடு வட்ட முதன்மை தபால் அதிகாரி சாருகேசி, என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி, திருச்சி மண்டல தபால் அதிகாரி நிர்மலா தேவி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இந்த கண்காட்சியில் பல்வேறு தபால்தலைகள் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து தமிழ்நாடு வட்டத்தில் முதன் முறையாக சிறப்பு தபால்உறை மற்றும் கடலூரை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தபால்உறை டிரோன் மூலம் கடலூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து விழா நடைபெற்ற டவுன்ஹால் வரை கொண்டுவரப்பட்டு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு தலைமை தபால் அதிகாரி சாருகேசி நிருபர்களிடம் கூறியதாவது:-

டிரோன் சேவை

டிரோன் மூலம் சிறப்பு தபால்உறை வெளியிட்டுள்ளோம். முதன் முதலில் குஜராத்தில் இந்திய தபால் துறை மூலம் கொரோனா நேரத்தில் டிரோன் மூலம் மருந்து வினியோகம் செய்யப்பட்டது. இந்த டிரோனை தபால் நிலையங்களில் பயன்படுத்தலாம் என்று தெரிவிப்பதற்காக, இங்கு டிரோன் மூலம் தபால் உறை வெளியிடப்பட்டது. வருங்காலத்தில் டிரோன் மூலம் தபால் சேவை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். இருப்பினும் இது அரசின் கொள்கை முடிவு.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜார்கண்டில் புதிய சுரங்கம்

என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி நிருபர்களிடம் கூறுகையில், ஒடிசாவில் 3 அலகில் தலா 800 மெகாவாட் மின் உற்பத்தி மற்றும் 800 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் தொடங்க இருக்கிறோம். ஜார்கண்ட் மாநிலத்திலும் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்