< Back
தமிழக செய்திகள்
பிரதமர் மோடி உருவ பொம்மை எரிப்பு
தஞ்சாவூர்
தமிழக செய்திகள்

பிரதமர் மோடி உருவ பொம்மை எரிப்பு

தினத்தந்தி
|
28 March 2023 1:10 AM IST

பிரதமர் மோடி உருவ பொம்மை எரிப்பு

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று பாப்பாநாட்டில் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி.எஸ்.ஆர்.சங்கரசூரியமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் ஆவிடநல்லவிஜயபுரம் ஆர்.திருஞானம், சோழகன்குடிக்காடு அய்யாதுரை ராமகிருஷ்ணன், ராமலிங்கம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு, அவரது உருவ பொம்மையை தீ வைத்து எரித்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாப்பாநாடு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 15-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்