< Back
மாநில செய்திகள்
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உருவபொம்மை எரிப்பு
திருச்சி
மாநில செய்திகள்

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உருவபொம்மை எரிப்பு

தினத்தந்தி
|
18 Sept 2023 3:38 AM IST

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உருவபொம்மை எரிக்கப்பட்டது.

மலைக்கோட்டை:

திருச்சி மேல சிந்தாமணி அண்ணாசிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை கொடுக்க வேண்டும். கர்நாடக அரசு மாதந்தோறும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் போராட்டத்தின் 46-வது நாளான நேற்று, காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவை கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பி, விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்