< Back
மாநில செய்திகள்
கல்வி தொலைக்காட்சி சிஇஒ நியமன சர்ச்சை - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
மாநில செய்திகள்

"கல்வி தொலைக்காட்சி சிஇஒ நியமன சர்ச்சை" - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தினத்தந்தி
|
18 Aug 2022 9:43 PM IST

கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையானது.

சென்னை,

தமிழக அரசு கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையானது.

இந்த நிலையில், இது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேர்முகத்தேர்வு நடத்திய பின்னரே கல்வி தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரியாக மணிகண்ட பூபதி நியமிக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

மேலும் செய்திகள்