ராணிப்பேட்டை
கல்வி உதவித்தொகை, விளையாட்டு பொருட்கள் வழங்கும் விழா
|கல்வி உதவித்தொகை, விளையாட்டு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இந்திய வளர்ச்சி இயக்கம் சார்பில் கல்வி உதவி தொகை, மகளிருக்கான விளையாட்டு பொருட்கள், முன்பருவ கல்வி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாநில திட்ட இயக்குனர் சுமதி தலைமையில் நடந்தது. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் வரலட்சுமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பூர்ணசந்தர், சந்திரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் எஸ். என். உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன், துணைத் தலைவர் பழனி, தி.மு.க. செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.5 லட்சம் மதிப்பில் கல்வி உதவி தொகை, மகளிருக்கான விளையாட்டு பொருட்கள், முன்பருவ கல்வி கற்றல் உபகரணங்கள், மரக்கன்றுகள் வழங்கினர். தன்னார்வலர்கள், இந்திய வளர்ச்சி இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.