< Back
மாநில செய்திகள்
சுற்றுலா ஏற்பாடு செய்யும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு
மாநில செய்திகள்

சுற்றுலா ஏற்பாடு செய்யும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு

தினத்தந்தி
|
24 March 2023 2:45 AM GMT

சுற்றுலா ஏற்பாடு செய்யும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் என்ஜினீரியங் கல்லூரியின் என்.எஸ்.எஸ். சார்பில் கடந்த 2014ம் ஆண்டு கூவத்தூர் முதல் தென்பட்டிணம் இடையிலான கடலோர பகுதியில் சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர் மதனகோபால், கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து, ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு அவரது தாயார் சர்மிளா, சகோதரி திவ்யபாரதி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, கல்லூரி நிர்வாகம் நடத்திய இந்த நிகழ்ச்சி குறித்து தங்களுக்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்று, மத்திய, மாநில அரசுகள், அண்ணா பல்கலைக்கழகம், மாவட்ட கலெக்டர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தனியார் கல்லூரி தரப்பில், கடலுக்குள் இறங்கக் கூடாது என அறிவுறுத்தியும், மதனகோபாலும், மற்றொரு மாணவரும் கடலில் குதித்ததால், இந்த துயர சம்பவம் நடந்து விட்டது. இதற்கு கல்லூரி நிர்வாகம் பொறுப்பாகாது என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க கல்லூரி நிர்வாகம் வழங்க வேண்டும். கல்விச் சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும், கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்