< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
|17 July 2023 12:30 AM IST
பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள கோடங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இதற்கு காயத்ரி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் தினகரன் முன்னிலை வகித்தார். பள்ளியின் புரவலர் ரங்கசாமி, கல்வித்தந்தை காமராசர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பள்ளியின் கல்வி வளர்ச்சிக்கு புதிதாக வாங்கப்பட்ட டி.வி.யினை ராசு பள்ளிக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவ- மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளி ஆசிரியை சத்தியா நன்றி கூறினார்.