< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு ஊர்வலம்
அரியலூர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
19 Nov 2022 12:30 AM IST

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கவிதா கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடி அசைத்து தொங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் பள்ளியில் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விக்கிரமங்கலத்தில் உள்ள பெருமாள்கோவில் வீதி, திரவுபதியம்மன் கோவில் வீதி, போலீஸ் நிலையம் சாலை, மெயின் ரோடு ஆகிய வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களின் கையில் மாற்றுத்திறனாளிகளின் கல்வி விழிப்புணர்வு பற்றிய பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு பற்றிய கோஷங்கள் எழுப்பினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் மற்றும் பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்