< Back
மாநில செய்திகள்
சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு  மத்திய அரசின் கல்வி உதவித்தொகை  விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
கடலூர்
மாநில செய்திகள்

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

தினத்தந்தி
|
27 Oct 2022 12:42 AM IST

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்குமத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத் தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீ கரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 31.10.2022 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 31.10.2022 வரை மேற்படி இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பாக இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http:www.minorityaffairs.gov.in/schemes என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிர மணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்