< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைசூப்பிரண்டு சசாங்சாய் வழங்கினார்
|5 Aug 2023 12:15 AM IST
போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை சூப்பிரண்டு சசாங்சாய் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் போலீசார் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2022-2023ம் ஆண்டில் உயர்கல்வி படிக்கச்செல்லும் காவல்துறையினர், அமைச்சுப்பணியாளர்களின் குழந்தைகளான 21 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் நேற்று வழங்கினார். இதில் மொத்தம் ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 895 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அப்போது, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோவிந்தராஜ், ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.