திண்டுக்கல்
திண்டுக்கல்லில் 20 மாணவர்களுக்கு ரூ.4 கோடி கல்விக்கடன்
|திண்டுக்கல்லில் நடந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில் 120 மாணவர்களுக்கு ரூ.4 கோடி கல்வி கடன் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவை சார்பில் கல்விக் கடன் வழங்கும் முகாம், திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இந்த முகாமில் மொத்தம் 251 மாணவ, மாணவிகள் கல்வி கடன் கேட்டு மனு கொடுத்தனர். அதில் 120 மாணவ, மாணவிகள் சுமார் ரூ.4 கோடி கல்வி கடன் வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து கல்வி கடனுக்கான உத்தரவுகளை கலெக்டர் வழங்கினர். மேலும் மீதமுள்ள மாணவ, மாணவிகளிடம் தேவையான கூடுதல் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட வங்கிகளில் வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கனரா வங்கி உதவி பொது மேலாளர் ரங்கநாத், பாரத ஸ்டேட் வங்கி தலைமை வணிக மேலாளர் சுஜாதா, ஜி.டி.என். கலைக்கல்லூரி முதல்வர் பாலகுருசாமி. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காமேஸ்வரி, முன்னோடி வங்கி மேலாளர் அருணாச்சலம். திண்டுக்கல் மேற்கு தாசில்தார் ரமேஷ்பாபு, அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.