< Back
மாநில செய்திகள்
அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப கல்வித் துறை திடீர் உத்தரவு
மாநில செய்திகள்

அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப கல்வித் துறை திடீர் உத்தரவு

தினத்தந்தி
|
17 Feb 2023 10:19 AM IST

பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் விவரங்களை அவசரமாக அனுப்ப கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்து கீழ்காணும் விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும்.

நீண்ட கால விடுப்பில் உள்ளவர்கள், நீண்ட காலமாக தகவலன்றி பணிக்கு வராதவர்கள், தொடர்ந்து விடுப்பில் உள்ளவர்கள் (அடிக்கடி விடுப்பில் உள்ளவர்கள்). மேற்காணும் விவரங்களை மிகவும் அவசரம் என கருதி இ-மெயில் மூலம் உடனே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்