< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
கல்வியும் காவலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
|22 July 2023 11:56 PM IST
கல்வியும் காவலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸ் நிலையத்தில் நேற்று கல்வியும், காவலும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு போலீசார் செயல்பாடு, கைரேகை பிரிவு, மோப்ப நாய் படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சைபர் குற்றங்கள் மற்றும் காவல்துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், தோட்டாக்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் போதை பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள், போக்குவரத்து விதிகளை மீறுவது போன்ற குற்றங்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரைகள் வழங்கப்பட்டது.