< Back
மாநில செய்திகள்
எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
13 Jan 2024 12:50 PM IST

பொது கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்ற உள்ளார்.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் மேற்கு பகுதி செயலாளரான நித்தியானந்தம் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதில், எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி ஜன.19ல் ஆர்.கே. நகர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்ற உள்ளார்.

இந்த கூட்டத்திற்கு அனுமதி பெற அப்பகுதி காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதனை அரசியல் காரணங்களுக்காக நிராகரித்துள்ளனர். எனவே பொது கூட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. இதில் சுண்ணாம்பு கால்வாய், திலகர் நகரில் கூட்டங்கள் நடத்த யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தண்டையார் பேட்டையில் பொது கூட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்