< Back
மாநில செய்திகள்
வரும் காலங்களில் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் - தங்கமணி பேட்டி
மாநில செய்திகள்

வரும் காலங்களில் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் - தங்கமணி பேட்டி

தினத்தந்தி
|
2 Sept 2022 1:53 PM IST

வரும் காலங்களில் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.

சென்னை,

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு வந்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு சான்றாக ஐகோர்ட்டு தீர்ப்பு வந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எங்கு சென்றாலும், நியாயம் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதால் நாங்கள் வெற்றி பெறுவோம்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் யாரும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணையவில்லை. அமமுகவில் இருந்து தான் ஓபிஎஸ் தரப்பில் இணைந்து வருகின்றனர். வரும் காலங்களில் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்