< Back
மாநில செய்திகள்
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு  எடப்பாடி பழனிசாமி மரியாதை
மாநில செய்திகள்

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி மரியாதை

தினத்தந்தி
|
15 Sept 2023 2:23 PM IST

அண்ணாவின் உருவப்படத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை, பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

திராவிடத்தின் பிதாமகர், சமூகநீதி, மாநில உரிமை,மொழி உரிமை போன்றவற்றிற்காக சமரசமின்றி போராடி தமிழ்நாட்டிற்காக வென்றெடுத்த, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல்சொல், தமிழ் இனத்தின் வரலாற்றில் குன்றாப் புகழுடன் என்றும் நிலைத்து நிற்கும்,பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாளில் அவரது திருவுருவப்படத்திற்கும்,பேரறிஞர் பெருந்தகையாரின் திருவுருவ சிலைக்கும் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கி பெருமையுற்றேன். என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்