< Back
மாநில செய்திகள்
தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
மாநில செய்திகள்

தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி

தினத்தந்தி
|
8 Sept 2022 6:41 PM IST

தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற நான்(எடப்பாடி பழனிசாமி), இன்று தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தபோது, தலைமைக் கழகச் செயலாளர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழ உறுப்பினர்கள் மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்,

கிளைக் கழகச் செயலாளர்கள், நகர, பேரூராட்சி வார்டு கழகச் செயலாளர்கள், மாநகராட்சி வட்டக் கழகச் செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கட்சி தொண்டர்களும் உற்சாகம் பொங்க வரவேற்று, வாழ்த்து தெரிவித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் நல்லாசியோடும், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களின் ஒத்துழைப்போடும், சிறந்த முறையில் கட்சியை வழிநடத்தி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர்வதற்கு இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன் என்ற உறுதியை மனதார அளிக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்