< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்
|10 Sept 2022 9:51 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி,
கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த 'சீல்' அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.