< Back
மாநில செய்திகள்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - கே.பி.முனுசாமி பங்கேற்கவில்லை
மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - கே.பி.முனுசாமி பங்கேற்கவில்லை

தினத்தந்தி
|
10 Oct 2022 8:39 PM IST

எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

சென்னை,

எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் வருகிற 17, 20 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில் தொடக்க விழா பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்துவது குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கட்சியை பலப்படுத்துவது குறித்தும், அமைப்பு ரீதியாக காலியாக உள்ள பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்