< Back
மாநில செய்திகள்
யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் என்ற முண்டாசுக் கவிஞர் பாரதியார் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்...!
மாநில செய்திகள்

'யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்' என்ற முண்டாசுக் கவிஞர் பாரதியார் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்...!

தினத்தந்தி
|
11 Dec 2022 2:11 PM IST

யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் என்ற முண்டாசுக் கவிஞர் பாரதியார் என எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை,

மகாகவி பாரதியாரின் 141-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதியாருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

"உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே" என்று பாடிய புரட்சியாளர், 'யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்!' என அஞ்சா நெறி வழிதொட்டு முண்டாசுக் கவிஞர் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்