கொளத்தூர் தொகுதியில் தனிக்குழு அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு
|அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
சென்னை,
பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், அதிமுக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலின்போது மேற்கொள்ள வேண்டிய கள நடவடிக்கைகள், தொண்டர்களின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் பூத் கமிட்டியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள தனிக்குழு அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொளத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி திருப்திகரமாக இல்லாததால், அதனை ஒருங்கிணைத்து அமைக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.