திருச்சி
தமிழகத்தின் ராஜபக்சேவாக எடப்பாடி பழனிசாமி உருவாகியுள்ளார்-டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
|தமிழகத்தின் ராஜபக்சேவாக எடப்பாடி பழனிசாமி உருவாகியுள்ளார் என டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டினார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் அ.ம.மு.க. நிர்வாகி இல்ல துக்க நிகழ்ச்சிக்கு வருகை தந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:- பொதுக்குழுவை கூட்டி தன்னை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்துக்கொண்டு உள்ளார். ஜெயலலிதா வளர்த்த இயக்கம் தற்போது வீழ்ச்சி பாதையில் செல்கிறது. தலைமை கழகத்தை சீல் வைத்து உள்ளனர். ஓ.பன்னீர் செல்வத்தை அமைதியான வழியில் விட்டிருந்தால் இந்த பிரச்சினை நடந்து இருக்காது.
எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சேவாக உருவாகியுள்ளார். இலங்கையில் எப்படி ராஜபக்சே நாட்டை விட்டு ஓடினாரோ அதேபோல் தமிழகத்தில் கட்சியிலிருந்து விரட்டி அடிக்கப்படும் காலம் வரும். சசிகலா சட்டரீதியாக போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் பிரிந்தவர்கள் கட்சி ரீதியாக இணைகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.