அதிமுகவை நாசப்படுத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
|அபகரிக்கப்பட்ட அதிமுகவை மீட்டு விரைவில் கோட்டையில் கொடி ஏற்றுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் மீட்பு உரிமைக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
அபகரிக்கப்பட்ட அதிமுகவை மீட்டு விரைவில் கோட்டையில் கொடி ஏற்றுவோம். இந்தியா கூட்டணி ஆண்டிகள் மடம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிதான் வெற்றி பெறுவார். அதிமுகவை நாசப்படுத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி. நான்கரை ஆண்டு காலம் ஆட்சி நீடிக்க நான் (ஓ.பன்னீர்செல்வம்) வேண்டும், பாஜக வேண்டும். நான்கரை ஆண்டு காலம் கழித்து பாஜகவை விட்டு வெளியேறி விட்டதாக அரசியல் நாகரிகம் இல்லாமல் எடப்பாடி கூறுகிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் சசிகலாவுடன் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டால் எளிதாக வெல்லலாம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா என்னிடமும், எடப்பாடி பழனிசாமியிடமும் கூறினார்; அதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். இன்னும் சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.