< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அதிமுக தேர்தல் பணிக்குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
|8 Feb 2023 12:49 PM IST
அதிமுக தேர்தல் பணிக்குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். அவரது வேட்புமனு தாக்கல் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக தேர்தல் பணிக்குழுவினருடன் ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் ஆலோசனை கூட்டம் இதுவாகும்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 107 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.