ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
|ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
சென்னை,
பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது. பதக்கம் வென்ற இந்திய அணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"பாரீஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பல்வேறு தடைகளைக் கடந்து, நம் நாட்டிற்கே பெருமை சேர்க்கும் விதமாக நமது வீரர்கள் பெற்றிருக்கக் கூடிய இந்த வெற்றி மெச்சத்தக்கது. குறிப்பாக, இந்திய அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் இந்தத் தொடர் முழுவதும் சுவர் போல நின்று எதிரணியினர் வெல்ல முடியாத அளவு காத்திட்டது அசாத்தியமானது.
தங்கப் பதக்கம் நூலிழையில் தப்பிவிடினும், பல தங்கப் பதக்கங்களுக்கு நிகரான நம் வீரர்களின் உழைப்பினைப் பாராட்டுகிறேன்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.