< Back
மாநில செய்திகள்
இலங்கை அதிபர் திசநாயகேவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
மாநில செய்திகள்

இலங்கை அதிபர் திசநாயகேவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தினத்தந்தி
|
23 Sept 2024 8:56 PM IST

இலங்கை அதிபர் திசநாயகேவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

staசென்னை,

இலங்கையில் நடந்து முடிந்த 9-வது அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே மொத்தமாக 57 லட்சத்து 40 ஆயிரத்து 179 வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடினார். வெற்றி பெற்றதன் மூலம் திசநாயகே, புதிய அதிபர் ஆனார்.

இந்த நிலையில், இலங்கையின் புதிய அதிபர் அனுரா குமார திசநாயகேவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"நமது அண்டை நாடான இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்ற அனுரா குமார திசநாயகேவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் பிடியிலிருந்து விடுவிக்கவும் புதிய இலங்கை அதிபர் அவர்கள் செயல்பட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்