< Back
மாநில செய்திகள்
ரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
மாநில செய்திகள்

ரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தினத்தந்தி
|
12 March 2024 11:17 PM IST

இஸ்லாமியர்களுக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாலருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

ரமலான் நோன்பு மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாலருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இறைவனின் கட்டளைப்படி, காலை முதல் மாலை வரை ஒருமாத கால நோன்பிருந்து, வணக்க வழிபாடுகள் போன்ற இறைவணக்கம் வாயிலாகவும், பொய், பொறாமை போன்ற தீய செயல்களை தவிர்த்து, ஏழைகளின் பசித் துன்பத்தை உணர்ந்து, அவர்களின் பசிப் போக்கும் ஈகை எனும் தர்மத்தை அதிகம் செய்து, இறை திருப்தியை பெறும் மாதமாகவும், புனித குர்ஆன் அருளப்பட்ட புண்ணியம் மிகுந்த, கண்ணியமான அருள் நிறைந்த, புனிதமிகு ரமலான் மாதத்தை அடைந்துள்ள, உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களுக்கு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், எனது உளமார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்