< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'அ.தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதிவிடுவார்' - டி.டி.வி.தினகரன் விமர்சனம்
|2 Oct 2024 8:40 PM IST
அ.தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதிவிடுவார் என டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு இருந்தார்கள் என்றால், 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதிவிடுவார்.
எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வுடன் கள்ளக்கூட்டணி வைத்துக் கொண்டு, நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே வேட்பாளரை நிறுத்துகிறார். தி.மு.க.வுக்கு எதிராக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கண்டுபிடித்த வெற்றிச் சின்னமான இரட்டை இலை இன்று தி.மு.க.வின் வெற்றிக்கு மறைமுகமாக பயன்படுவதுதான் வருத்தமளிக்கிறது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.