< Back
மாநில செய்திகள்
எடப்பாடி பழனிசாமியின் வேஷத்தை சிறுபான்மையினர் நன்கு அறிவார்கள் - டி.டி.வி. தினகரன்
மாநில செய்திகள்

'எடப்பாடி பழனிசாமியின் வேஷத்தை சிறுபான்மையினர் நன்கு அறிவார்கள்' - டி.டி.வி. தினகரன்

தினத்தந்தி
|
9 Jan 2024 9:15 PM IST

எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் அனைவரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி போடும் வேஷத்தை சிறுபான்மையினர் நன்கு அறிவார்கள் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"சிறுபான்மையின மக்கள் ஏமாளிகள் அல்ல. எடப்பாடி பழனிசாமி போடும் வேஷத்தை அவர்கள் நன்கு அறிவார்கள். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறுபான்மையினர் மட்டுமின்றி, தமிழக மக்கள் அனைவரும் தக்க பாடம் புகட்டுவார்கள்."

இவ்வாறு டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்