< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை
|9 March 2024 8:31 AM IST
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை,
வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூர்-வேப்பேரி, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், இ.சி.ஆர்., உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.