< Back
மாநில செய்திகள்
அமைச்சர் அனிதா ராதகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த மனு இன்று விசாரணை..!
மாநில செய்திகள்

அமைச்சர் அனிதா ராதகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த மனு இன்று விசாரணை..!

தினத்தந்தி
|
19 July 2023 12:39 PM IST

அமைச்சர் அனிதா ராதகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த மனு இன்று தூத்துக்குடி நீதிமன்றம் விசாரணைக்கு வருகிறது.

தூத்துக்குடி,

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2001-2006 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான ரூ.4 கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கைத் தூத்துக்குடி நீதிமன்றம் விசாரித்துவருகிறது.

வழக்கில் 80 சதவிகிதம் விசாரணை முடிந்த நிலையில் தங்களையும் இணைக்கக் கோரி ஏப்ரல் 18ல் தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை ஜூலை 19 ஆம் தேதிக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. தற்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மகன்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். அமலாக்கத்துறை கோரிய மனு மீது தூத்துக்குடி நீதிமன்றம் இன்று என்ன முடிவு எடுக்கப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் குறி வைத்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்