< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை: கோல்டு கம்பெனியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
மாநில செய்திகள்

திருவண்ணாமலை: கோல்டு கம்பெனியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
24 May 2022 12:18 PM IST

ஆரணி அருகே புதிதாக தொடங்கப்பட்ட கோல்ட் கம்பெனியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்..

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் உள்ள தனியார் லாட்ஜ் வளாகத்தில் புதியதாக ஆரூத்ரா கோல்டு கம்பெனி கடந்த 6-ந் தேதி எந்த ஓரு விளம்பரமின்றி திறக்கபட்டன.

அப்போது ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் 36 ஆயிம் ரூபாய் வட்டியாகவும் தொடர்ந்து 10 மாதம் வழங்கபடுவதாகவும், அதனையடுத்து டெபாசிட் செய்த பணத்தை கொண்ட ஆவணம் புதுப்பித்து தரப்படும் என்று கவர்ச்சிகரமான திட்டமாக பொதுமக்களுக்கு ஆரூத்ரா நிறுவனம் தெரிவித்துள்ளன.

மேலும் சென்னை அமைந்தகரை தலையிடமாக கொண்டு விளங்கும் ஆரூத்ரா என்ற கோல்டு கம்பெனி வில்லிவாக்கம், அண்ணாநகர், ஆவடி, ராணிப்பேட்டை, வேலூர், செய்யார், பெருங்களத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட சுமார் 20 இடங்களில் கிளைகள் உள்ளதாக தெரிகின்றன.

இந்நிலையில் இன்று சேவூர் கிராமத்தில் உள்ள ஆரூத்ரா கோல்டு கம்பெனியில் ராணிப்பேட்டை மாவட்டம் குற்றப்பிரிவு டி.எஸ்.பி பழனி தலைமையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சுமார் 3-மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டார்

இது குறித்து ஆருத்ரா கோல்டு நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் நரேஷ் கூறியதாவது,

1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் 36 ஆயிம் ரூபாய் வட்டி எனும் விளம்பரத்தை நாங்கள் வெளியிடவில்லை. எங்களது நிறுவன பெயரை பயன்படுத்தி யாரோ மோசடி செய்கிறார்கள்.

தற்போது வரை பழைய நகையை வாங்கி விற்பது, நகைக்கடன், தங்கசேமிப்பு திட்டம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் மட்டுமே செய்கிறோம்.

மேலும் ஆரூத்ரா கோல்ட் நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்த யாரும் ஏமாறவில்லை. இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவில் உரியவிளக்கம் தந்துள்ளோம். ஆவண ஆய்வுக்காகவே போலீசார் வந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்