< Back
மாநில செய்திகள்
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா: 8-ந்தேதி பொதுமக்களிடம் கருத்து கேட்பு
மாநில செய்திகள்

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா: 8-ந்தேதி பொதுமக்களிடம் கருத்து கேட்பு

தினத்தந்தி
|
3 Jan 2024 4:26 AM IST

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்குடியில் குப்பை கொட்டும் வளாகம் உள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்குடியில் குப்பை கொட்டும் வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், பள்ளிக்கரணை ஐ.ஐ.டி. காலனியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் வருகிற 8-ந் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது.இந்த கூட்டத்திற்கு மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்