< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணை திறப்பு எதிரொலி; தூர்வாரும் பணிகள் தீவிரம்
மாநில செய்திகள்

மேட்டூர் அணை திறப்பு எதிரொலி; தூர்வாரும் பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
22 May 2022 9:14 PM IST

மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு தஞ்சையில் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

தஞ்சை,

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வரும் 24ம் தேதி நீர் திறக்கப்பட உள்ளது. நீர் வரத்து அதிகம் உள்ளதால் வழக்கத்தை விட முன்கூட்டியே அணை திறக்கப்பட உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படுவதை முன்னிட்டு, தஞ்சை வெண்ணாற்றில் இருந்து பிரியும் ஜம்பு காவிரியில், தூர்வாரும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டால் தஞ்சையில் குறுவை சாகுபடி களைகட்டும்.

எனவே, தூர்வாரும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் எதிரொலியாக 21 கோடி ரூபாய் மதிப்பில், சுமார் 170 இடங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் செய்திகள்