< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடர் மழை எதிரொலி - சென்னை மாநகராட்சி ஷாக் ரிப்போர்ட்
|10 Nov 2022 8:38 AM IST
சென்னை கடற்கரையில் 34.50 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கடற்கரையில் குவிந்தன. இதனை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களில் பட்டினபாக்கம் சீனிவாசபுரத்தில் 26.50 மெட்ரிக் டன் கழிவுகள் மற்றும் ப்ரோக்கன் பிரிட்ஜ் பகுதியில் 8 மெட்ரிக் டன் கழிவுகள் என மொத்தமாக 34.50 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.