ஈஸ்டர் திருநாள்; அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து
|உலக மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், நல்வாழ்வையும் வழங்கிடும் நன்னாளாக அமையட்டும்.
சென்னை,
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
அன்பின் திருவுருவான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும், மரணத்தின் மீது அவர் கொண்ட வெற்றியையும் குறிக்கும் நாளான ஈஸ்டர் திருநாள், உலக மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், நல்வாழ்வையும் வழங்கிடும் நன்னாளாக அமையட்டும்.
உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவிட வேண்டும், பகைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்ற வருங்கால தலைமுறைக்கும் வழிகாட்டும் நெறிகளாக திகழக்கூடிய இயேசுபிரானின் போதனைகளை பின்பற்றி, அன்பு நிறைந்த அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம் எனக்கூறி கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.