< Back
மாநில செய்திகள்
ஈஸ்டர் பண்டிகையையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
நாமக்கல்
மாநில செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தினத்தந்தி
|
10 April 2023 12:15 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.

ஈஸ்டர் பண்டிகை

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதையொட்டி நாமக்கல்லில் துறையூர் சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் பங்கு தந்தை செல்வம் தலைமையில் கூட்டுத் திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

சிறப்பு பிரார்த்தனை

மேலும் தமிழ் பாப்தீஸ்து திருச்சபையில் போதகர் மனோவா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது டேனியல் தேவராஜ் தேவ செய்தியை பேசினார். இதேபோல் சேலம் சாலையில் உள்ள அசெம்பளி ஆப்காட் திருச்சபை மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், அந்தந்த பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டதோடு ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்