< Back
மாநில செய்திகள்
மானாமதுரை சட்டமன்ற அலுவலகத்தில் இ-சேவை மையம்
சிவகங்கை
மாநில செய்திகள்

மானாமதுரை சட்டமன்ற அலுவலகத்தில் இ-சேவை மையம்

தினத்தந்தி
|
7 May 2023 12:15 AM IST

மானாமதுரை சட்டமன்ற அலுவலகத்தில் இ-சேவை மைய்யத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

மானாமதுரை

மானாமதுரை பகுதிக்கு உட்பட்ட சுற்றுவட்டார கிராமத்தினர் அரசின் சலுகைகள், பல்வேறு சான்றிதழ்கள் பெற வேண்டும் என்றால் மானாமதுரை தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும். அல்லது தனியார் கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு சென்றுதான் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மானாமதுரை சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இ-சேவை மையத்ைத தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இந்த இலவச இ-சேவை மையத்தில் சிறு குறு விவசாயி சான்றிதழ், ஓய்வூதிய திட்டம், விதவை சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்பட அனைத்து திட்டங்களுக்கும் இலவசமாக பதிவு செய்யலாம் எனவும், பதிவு செய்தவுடன் சான்றிதழ் கிடைக்கும் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன், இளையான்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், மாநில தலைமை கழக பேச்சாளர் அய்யாசாமி, நகராட்சி கவுன்சிலர் இந்துமதி திருமுருகன், செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்