< Back
மாநில செய்திகள்
திருவாரூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இ- சேவை மையம்
திருவாரூர்
மாநில செய்திகள்

திருவாரூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இ- சேவை மையம்

தினத்தந்தி
|
23 July 2022 11:41 PM IST

திருவாரூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இ- சேவை மையம்

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சத்திகுமார் நேற்று திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிமன்ற பணிகள் மற்றும் கோப்புகள் குறித்து வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் இ பைலிங் உதவி மையம் மற்றும் இ-சேவை மையத்தினை திறந்து வைத்து பேசுகையில்,

இந்த சேவை மையங்களில் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வழக்கு விவரம், வாய்தா தேதி அதன் பொருட்டு மற்ற விவரங்களையும் இதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இ கோர்ட்டு திட்டத்தின் கீழ் டிஜிட்டல் முறையில் கிடைக்கும் வசதிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்த சேவை மையத்தில் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என்றார். இதில் மாவட்ட நீதிபதி சாந்தி, மாவட்ட குடும்ப நல நீதிபதி சங்கர், தலைமை குற்றவியல் நீதிபதி பாலமுருகன் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் சங்க தலைவர்கள், செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்