< Back
மாநில செய்திகள்
காரியாபட்டியில் இ-சேவை மையம்
விருதுநகர்
மாநில செய்திகள்

காரியாபட்டியில் இ-சேவை மையம்

தினத்தந்தி
|
14 Jun 2023 1:58 AM IST

காரியாபட்டியில் இ-சேவை மையம் தொடங்கப்பட்டது.

காரியாபட்டி,

காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படித்து வரும் பள்ளி மாணவ-மாணவிகள் தங்களுக்கு தேவையான சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று போன்ற பல்வேறு வகையான சான்றுகளை பதிவு செய்வதற்கு இ-சேவை மையங்களுக்கு சென்று வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் இ-சேவை மையம் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிதாக இ-சேவை மையத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, மாவட்ட பிரதிநிதி சங்கர பாண்டியன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் தங்கபாண்டியன், துணைத்தலைவர் கல்யாணி, காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்